திருவாரூர், ஜூன் 7- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) ஆட்சியர் த.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணி, நகர், பன்னிமங்கலம், சித்தமல்லி மேல்பாதி உள்ளிட்ட பத்து கிராம மக்கள் கலந்து கொண்டு பட்டாமாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 135 மனுக்களை வழங்கினர். பின்னர் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அ.பதிவேடு, அடங்கல், பட்டா படிவம் உள்பட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என ஆட்சியர் ஆய்வு செய்தார்.