tamilnadu

மும்பை,புதுதில்லி மற்றும் அகமதாபாத் முக்கிய செய்திகள்

வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்


மும்பை, ஏப். 19-வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி, ஜெட்ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள், தில்லி மற்றும் மும்பையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடன்சுமை மற்றும் நிதி நெருக்கடியால் ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் முடங்கியுள்ளது. ஏற்கெனவே 4 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாத நிலையில், 16 ஆயிரம்ஊழியர்களின் வேலை கேள்விக்குள்ளாகி இருக்கிறது.இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தங்களை இக்கட்டில் நிறுத்தியிருப்பதாக மும்பை விமான நிலையத்தில் போராட்டத் த்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தையும், தங்கள் குடும்பங் களையும் காப்பாற்றுமாறு அவர்கள் முழக்கமிட்டனர். தில்லியிலும் ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மும்பை, தில்லி விமான நிலையங்களில் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ஸ்லாட்டுகளையும், வழித்தடங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஏர்இந்தியா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன.இதேபோல, ஜெட்ஏர்வேஸ் விமானங்களை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தவும் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகத்திற்கு தடை


புதுதில்லி, ஏப். 19-எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு வழியேயான வர்த்தக வழித்தடங்களை, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்திக் கொள்வதால், அந்த வர்த்தகத்திற்கு இந்தியா தற்காலிக தடை விதித்துள்ளது.ஜம்மு-காஷ்மீரில் ஊரி பகுதியின் சலாமாபாத் மற்றும் பூஞ்ச் பகுதியின் சக்கன்-தா-பாக் (ஊhயமமயn-னய-க்ஷயபா) மையங்கள் மூலம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், சில வழக்குகள் தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில், இந்த வர்த்தக வழித்தடங்கள் தீவிரவாத அமைப்புகளால் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வர்த்தகம் வெள்ளி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


ஹர்திக் படேல் மீது தாக்குதல்!


அகமதாபாத், ஏப். 19-குஜராத்தில் காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில், மேடையில் பேசிக் கொண்டிருந்த ஹர்திக் படேலை ஒரு நபர் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பட்டிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி என்ற படேல் சமூகத்தவருக்கான அமைப்பு, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இட ஒதுக்கீடு கோரி குஜராத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது. அதன் தலைவராக இருந்தவர் ஹர்திக் படேல். கடந்த மார்ச் மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.வெள்ளியன்று (ஏப்ரல் 19) காலையில் குஜராத்திலுள்ள சுரேந்தர் நகர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் ஹர்திக் கலந்துகொண்டார். ஜன் ஆக்ரோஷ் சபா என்று பெயரிடப்பட்ட இந்த கூட்டத்தை அம்மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது,மேடையில் ஏறிய ஒருவர் ஹர்திக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அந்த நபர் அடையாளம் காணப்பட்டாலும், அவர் என்ன காரணத்துக்காகத் தாக்கினார் என்பதற்கான விளக்கம் வெளியாகவில்லை.குஜராத்தில் ஆளும் கட்சியான பாஜகவை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் ஹர்திக். வியாழனன்று அவர் மஹிசாகர் மாவட்டத்திலுள்ள லுனாவாடா எனுமிடத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்தது. அங்கு ஹர்திக்கின் ஹெலிகாப்டர் ஒரு விவசாயியின் நிலத்தில் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அவர் ஹெலிகாப்டர் இறங்க மறுப்பு தெரிவித்தார். இதனால், அவர் சாலை வழியாக லுனாவாடா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையிலேயே, வெள்ளியன்று அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.