tamilnadu

திருச்சியில் வெளிநாட்டில் இருந்து வந்த 381 பேர் கண்காணிப்பில் உள்ளனர்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 24- திருச்சியில், சுய உதவிக் குழுவினர் மூலம் மாஸ்க் மற்றும் கிருமி நாசினி திரவங் கள் தயாரிக்கும் பணியை ஆட்சியர் சிவராசு  ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறிய தாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாஸ்க் மற்றும் கிருமி நாசினி திரவங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சியளித்து, மாஸ்க் மற்றும் கிருமி நாசினிகள் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. முதலில், தினமும் 2,000 முதல் 3,000 மாஸ்க்குகள் தயாரிக்கப்பட உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மாஸ்க் மற்றும் கிருமி நாசினிகள் எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 மகளிர் குழுக்களை கொண்டு, தினமும் 400 லிட்டர் கிருமி நாசினி திரவம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு  தயாரிக்கப்படும் பொருட்கள், அரசு மருத்து வக் குழுவினர் ஆய்வு செய்து, அனுமதி கிடைத்தவுடன் பொதுமக்களுக்கும் வழங்கப்படும்.  கடந்த 18 ம் தேதி முதல், விமான நிலை யத்தில் மருத்துவக் குழு மூலம், பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர். இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்படவில்லை. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில், 381 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 100க்கு மேல் படுக்கை வசதிகள் உள்ள தனியார் மருத்துவ மனைகளில், 25 சதவீதம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, அரசுக்கு வழங்க வேண்டும், என்று கேட்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.