tamilnadu

img

கழிவு நீரால் பாதிக்கப்படும் நிலத்தடி நீர்! சிபிஎம் போராட்ட அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, டிச.14- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பஞ்சப்பூர் உள்ளது. இப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பாதாள சக்கடை திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் கழிவு நீரை இப்பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக் காதவாறு சேமித்து சுத்திகரித்து விவசா யத்திற்கு பயன்படுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்தது. ஆனால் முறையாக கட்டாமல் 3 தொட்டிகளை அமைத்துள்ளனர். இத னால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக் கப்படுவதுடன் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை யடுத்து கழிவுநீரை சுத்திகரிக்காமல் கோரையாற்றில் விடுவதை உடனே நிறுத்த வேண்டும். முறையாக கட்டப்படாத கழிவு நீர் குளங்களை உடனே அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபி ஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் கடந்த வியாழனன்று பஞ்சப்பூர் திடலில் காத்தி ருக்கும் போராட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதிக்குழு செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். போராட்டத்தில் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல் வன், கட்சியினர் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் காவ லர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு  வந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இப்பிரச்சனை குறித்து வெள்ளிக் கிழமை மாலை கிழக்கு தாசில்தார் அலு வலகத்தில் தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் குளங்களை அப்புறப் படுத்துவது குறித்து கள ஆய்வு செய்து தீர்வு காண்பது என தெரி விக்கப்பட்டது. இதனால் எவ்வித தீர்வும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.  பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா கூறுகையில், இப்பகுதி மக்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணா விட்டால் தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என்றார். இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, அபிஷேகபுரம் பகுதிக்குழு செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், பஞ்சப்பூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.