tamilnadu

காந்தி மார்க்கெட்டை திறக்கக் கோரி திருச்சி ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 1- திருச்சி ஆட்சியர் சிவ ராசுவிடம், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:  கொரோனா தொற்று காரணமாக மார்ச் 30-ஆம் தேதி காந்தி மார்க்கெட் மூடப் பட்டது. பின்னர் காய்கனி வியாபாரத்திற்கு ஒதுக்கப் பட்ட ஜி கார்னர் உள்பட 5 இடங்களிலும் மாவட்ட நிர்வாகம் போதுமான அடிப் படை வசதிகள் செய்து தரவில்லை.  விடியற்காலை 4 மணிக்கு கடைகளை எடுக்கச் சொல்வதால் காய்கனிகளை முழுமையாக விற்க முடிய வில்லை. அதனால் நஷ்டத்தில் வியாபாரம் செய்கிறோம். அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் பெரிய கடைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் காந்தி மார்க்கெட் உள்ளே செயல்பட்டு வந்த பல தரப்பட்ட சிறு வியாபாரங்கள் 62 நாட்களாக செயல்படா மல் உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகளையும், சிறிய மார்க்கெட்களையும் திறந்தால் காந்தி மார்க்கெட் டில் கூட்ட நெரிசல் இருக் காது. அரசு அறிவித்துள்ள படி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமா வது காந்தி மார்க்கெட் திறக்க அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்த னர்.