tamilnadu

img

கொப்பனாப்பட்டியில் இலவச மருத்துவ முகாம்

பொன்னமராவதி, மே 26-பொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டியில் முத்து மீனாட்சி மருத்துவமனை மற்றும் சைன் லயன்ஸ் சங்கம் ஆகியவை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சைன் லயன்ஸ் சங்கத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். வட்டார தலைவர் பாலமுரளி, சங்க பொருளாளர் கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பெரியசாமி முகாமை துவக்கி வைத்தார். இதில் பொதுமக்கள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமிற்கு இருதய சிகிச்சை நோய் சிறப்பு மருத்துவர் நிஜாமுதீன், சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ நிபுணர் ராஜசேகரன், பல் மருத்துவர் ஆஷாபர்வீன் தோல்,  தொழுநோய் சிறப்பு மருத்துவர் முகமது ரபீக் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் பொன்னமராவதி லயன்ஸ் சங்கம், சிட்டி லயன்ஸ் சங்கம், ராயல் லயன்ஸ் சங்கம், சைன் லயன்ஸ் சங்கத் தலைவர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சைன் லயன்ஸ் சங்கச் செயலாளர் இளவரசன் வரவேற்றார். முதல் துணை தலைவர் சிங்காரம் நன்றி கூறினார்.