tamilnadu

சுமைப் பணி தொழிலாளர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மே 20- திருச்சி மாவட்ட சுமைப் பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.கே. ராமர், காவல்துறை ஆணையரி டம் கொடுத்த மனுவில் கூறி யிருந்ததாவது:  இ.பி.ரோட்டில் திருச்சி- சென்னை சாஸ்தா டிரான்ஸ் போர்ட் எக்ஸ்பிரஸ் பார்சல் சர்வீஸ் (SMI) கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக செயல்பட்டு வரு கிறது. இதில், அதிகபட்சமாக 35 வருடங்களாகவும், குறைந்த பட்சமாக 8 வருடங்களாகவும் சுமார் 11 சுமைப்பணி தொழிலா ளர்கள் லோடு இறக்கும், ஏற்றும் பணி செய்து வருகிறார்கள்.  ஊரடங்கால் வேலையிழப்பு ஏற்பட்டு தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையான வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன.

இதை யடுத்து திருச்சியில் உள்ள உரி மையாளரிடமும், சென்னையில் உள்ள உரிமையாளரிடமும் பேசி னோம். அதற்கு 25.4.2020 சென்னையில் இருந்து மெடிசன் பெட்டி ஏற்றி வரும் லாரியில் லோடை இறக்கி வாடகை வசூல் செய்து உங்களுக்கான நிவாரணம் வழங்குவதாக கூறினார்கள்.  நிவாரணம் வழங்க மறுக்கும் உரிமையாளர்கள் ஆனால் போக்கு லாரியில் லோடு ஏற்றி விட்டோம். எனவே லோடை இறக்கி லாரியை அனுப்பி விடுங்கள். பிறகு நமது லாரியில் வரும் லோடை இறக்கி உங்களுக்கான நிவாரணம் தரு கிறேன் என்று தொழிலாளர்களின் வறுமையை வியாபாரமாகவும், கடுமையான வார்த்தையாலும் பேசினார். ஆகவே தொழிலாளர்கள் லோடை இறக்க மறுத்து விட்டார்கள்.

காவல் ஆய்வாளர் உதவி

பிறகு 26.4.2020 கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சண்முகவேல் சொந்த முயற்சியில் 11 தொழிலாளர் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசியும், ரூ.1000 மதிப்புள்ள மளிகைச் சாமான்களும் வழங்கி உதவி புரிந்தார். எனவே இதில் தலையிட்டு 11 தொழிலா ளர் குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருமாறும், அதே போல் வேலையை உத்தரவாதப் படுத்தி தொழிலாளர் குடும்பங்க ளை பாதுகாத்திடுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  பிறகு கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப் பட்டு, காவல்துறை ஆய்வாளர் தலையிட்டு உரிமையாளரிடம், தொழிலாளர்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டியது தானே நின்று குறிப்பிட்டார். ஆனால் உரிமையாளர், தொழிலாளர்க ளுக்கு நிவாரணம் வழங்க மறுத்து விட்டார். தொழிலாளர்க ளிடம் காவல்துறை ஆய்வாளர் பேசி சமாதானம் செய்து லோடை இறக்க சம்மதம் தெரிவித்து லோடை இறக்கி லாரியை அனுப்பினார்கள்.