செம்போடை, மே 27-வேதாரண்யத்தை அடுத்த செம் போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரியில் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. செம்போடை சு.ஏ.பொறியியல் கல்லூரியும், சென்னை ஸ்கில்டுஜாப் நிறுவனமும் இணைந்து நடத்தியமுகாமிற்கு கல்லூரியின் நிறுவனர் டாக்டர் வரதராஜன் தலைமை வகித் தார். ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பிரபல செல்போன் தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிய தேர்வு செய்யப் பட்ட 11 மாணவிகளுக்கு பணி நியமனஆணை ரைசிங் ஸ்டார் கன்சல்டன்சி தினேஷ் வழங்கினார். பணி நியமனம் பெற்ற மாணவிகளை, கல்லூரியின் செயலர் செந்தில், நிர்வாக அலுவலர் கோவிந்தராஜு, பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலமுருகன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் யோகானந்த், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பக்கிரிசாமி மற்றும் போராசிரியர்கள் பாராட்டிவாழ்த்து தெரிவித்தனர். முகாம் ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் முகமது பைசல் மற்றும் உதவி பேராசிரியர்கள் லியோ பிரபு,அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.