அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் 15க்கும் மேற்பட்ட பல முன்னனி தொழில் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் முதல்வர் தனவிஜயன் தலைமையில் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் கலந்து கொண்டு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இதில் வேலைவாய்ப்பு அதிகாரி ராமலிங்கம், துணை முதல்வர் மோகன், துறைத்தலைவர்கள் ராஜசேகர், ராஜன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் அருமைநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.