tamilnadu

img

அரசுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது

தஞ்சாவூர், ஜூலை 14- சிஐடியு தஞ்சை மாவட்ட 14-ஆவது பிரதிநிதிகள் மாநாடு தஞ்சை நான்சி மஹாலில் ஞாயிறன்று சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் கொடியேற்றினார். வரவேற்பு குழுச் செயலாளர் சா.செங்குட்டுவன் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.பாலமுருகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் ம.கண்ணன் பொருளாளர் அறிக்கை வாசித்தார். வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தீர்மானங்களை முன்மொழிந்து எஸ்.ராஜாராமன், சா.ஜீவபாரதி, ஜி.மணிமாறன், கே.ஜேசுதாஸ், கே.வீரையன், என்.பி.நாகேந்திரன் ஆகியோர் பேசினர். 

நிர்வாகிகள் தேர்வு 

புதிய மாவட்டத் தலைவராக டி.கோவிந்தராஜூ, செயலாளராக சி.ஜெயபால், பொருளாளராக ம.கண்ணன், துணைத் தலைவர்களாக எஸ்.ராஜாராமன், த.முருகேசன், என்.பி.நாகேந்திரன், இ.டி.எஸ்.மூர்த்தி, கே.கல்யாணி, ஜேசுதாஸ், சா.ஜீவபாரதி, கே.வீரையன், எஸ்.சுப்பிரமணியன் ஆகியோரும், மாவட்ட துணைச் செயலாளர்களாக ஜி.மணிமாறன், பி.என்.பேர்நீதி ஆழ்வார், செங்குட்டுவன், ஆர்.சேகர், எஸ்.மில்லர் பிரபு, பி.பார்த்தசாரதி, எம்.கமலம், கே.அன்பு, கே.பாலமுருகன் ஆகியோர் அடங்கிய 65 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.  புதிய நிர்வாகிகளை வாழ்த்தி, அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு நிறைவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கோதண்டபாணி, வங்கி ஊழியர் சங்க செயல் தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார் நன்றி கூறினார்.  கூட்டத்தில், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டு டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஆகஸ்டு 1 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முறைசாரா தொழிலாளர்களின் முற்றுகை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டும். அரசுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. அரசுத் துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரியத்தை தனியார்மயமாக்குவதை கைவிட்டு தொடர்ந்து, அரசு நிறுவனமாக பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மாநாட்டு நிதி
முறைசாரா தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தஞ்சை மாநகராட்சி உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் சார்பாக அகில இந்திய மாநாட்டு நிதியாக தலா 30 ஆயிரம் வீதம் 60,000 வழங்கப்பட்டது. முன்னதாக தோழர் வி.என்.நினைவு ஜோதியை மாவட்ட பொருளாளர் எம்.கண்ணன் வழங்க, மாவட்ட தலைவர் து.கோவிந்தராஜ் பெற்றுக் கொண்டார். கொடிக் கம்பத்தை தோழர் ஜேசுதாஸ் வழங்க பி.எஸ்.சீனிவாசன் பெற்றுக் கொண்டார். கும்பகோணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநாட்டுக் கொடியை செந்தில்குமார் வழங்க இ.டி.எஸ்.மூர்த்தி பெற்றுக் கொண்டார்.