கரூர், ஜூன் 8- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு) மாவட்ட 10-வது மாநாடு கரூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாவட்ட தலைவர் ஆர்.குமரேசன் தலைமை வகித்தார். கரூர் கோட்ட தலைவர் எம்.மதியழகன் வரவேற்று பேசினார். சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கே.தனபால் வேலையறிக்கையை முன்வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் கே.செல்வம் வரவு- செலவு அறிக்கையை முன்வைத்து பேசினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செய லாளர் எஸ்.இராஜேந்திரன் சிறப்புரை யாற்றினார். சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் சி.முருகேசன், மின் ஊழியர் சங்க திருச்சி மண்டல செயலாளர் எம்.பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர் எஸ்.அகஸ்டின், டிஎன்பிஇஒ சங்க மாநில செயலாளர் ஜி.கோபாலகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்க தலைவர் வி.பி.கந்தசாமி ஆகியோர் பேசினர். சங்க நிர்வாகிகள் சரவணகுமார், கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் கோட்ட செயலாளர் வி.சுப்பிரமணியன் நன்றி கூறினார். புதிய மாவட்ட தலைவராக பெருமாள், செயலாளர் தனபால், பொருளாளர் செல்வம், துணை தலைவர்களாக மதியழகன், சரவணக்குமார், ஈஸ்வரன், கோபாலகிருஷ்ணன், ரதி மற்றும் உதவி செயலாளர்களாக சுப்பிரமணியன், மகாலிங்கம் நெடுமாறன், கனகராஜ், செல்வராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், மின் வாரியத்தில் உள்ள 50 ஆயிரம் காலி இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், புதிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.