திருச்சிராப்பள்ளி, ஜூலை 15- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு) பொன்விழா ஆண்டு கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா செவ்வாயன்று தென்னூ ரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். சிஐடியு கொடியை முன்னாள் மண்டல செயலாளர் பன்னீ ர்செல்வம் ஏற்றினார். கல்வெட்டை மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் திறந்து வைத்தார். பின்னர் மின் வாரிய அலுவலர்கள், ஊழியர்களுக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி கபசுர குடிநீர் வழங்கினார். நகரிய கோட்ட செயற்பொறி யாளர் பிரகாசம் ஆர்சனிக் ஆல்பம் மாத்திரை வழங்கி னார்.