tamilnadu

சிஐடியு பொன்விழா ஆண்டு கல்வெட்டு திறப்பு

செங்கல்பட்டு, செப்.15-  சிஐடியு பொன்விழா ஆண்டு மற்றும் 14 ஆவது மாநில மாநாட்டை  முன்னிட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் குடிநீர் ஏற்றும் நிலையம் அருகில் ‘பொன்விழா ஆண்டு நினைவு  கல்வெட்டு’ திறப்பு விழா மற்றும் கொடி யேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சங்கத்தின் தலைவர் புரு ஷோத்தமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலா ளர் பாலாஜி வரவேற்றார். நினைவு கல்வெட்டை  சிஐடியு மாநில உதவி  பொதுச் செயலாளர் வி.குமார் திறந்து வைத்தார்.  சங்க கொடியை சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் ஏற்றி வைத்தார்.  சங்கத்தின் பெயர் பல கையை ஆலோசகர் பீ.கே.வேலு திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிஐடியு வின் மாநில மாநாட்டிற்கு முதற்கட்ட நிதியாக ரூ.50 ஆயிரத்தை  எஸ்.கண்ண னிடம் வழங்கப்பட்டது. மாவட்ட சங்க நிர்வாகி கள் சோழவந்தான், சரவணன், கோகுலசந்திரன், பாலாஜி, பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.