tamilnadu

அந்தநல்லூர் ஒன்றியத்தில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரி சிபிஎம் மனு

திருச்சிராப்பள்ளி, மே20- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அந்தநல்லூர் ஒன்றியச் செய லாளர் வினோத்மணி திருப்ப ராய்த்துறை உதவி மின்பொறியாள ரிடம் கொடுத்த மனுவில் கூறி யிருந்ததாவது: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம், திருப்பராய்த் துறை பிரிவு கட்டுபாட்டில் இருக்கும் கிராமங்களில் அதிகமான மின் கம்பங்கள் பழுதடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளன. பல பகுதிகளில் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் நிலையிலும், தொங்கும் நிலையி லும் இருப்பதால், சாதாரணமாக காற்று வீசும்போது கூட மின் கம்பி கள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்ளுவதோடு, மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதால் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது.

மழை, காற்றுக் காலங்களில் பல இடங்களில் மின் கம்பிகள் மீது அடிக்கடி மரக்கிளைகள் உரசு வதால் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் துன்பம் அடைகிறார்கள். தென்மேற்கு பருவ மழை விரை வில் ஆரம்பமாக இருப்பதால், அதற்கு முன்பே போர்க்கால அடிப்ப டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த அனைத்து மின் கம்பங்களையும் புதிய மின் கம்பங்களாக மாற்றியும், தாழ்வாக தொங்கும் மின்கம்பி களை சரி செய்தும், மரக்கிளைகள் உரசும் இடங்களில் எல்லாம் உட னடியாக மரக் கிளைகளை வெட்டி தொடர்ச்கியாக ஏற்படும் மின்தடை களை நிவர்த்தி செய்திட நட வடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.  இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.  மேலும் மாவட்ட ஆட்சியர், சோமரசம்பேட்டை மின்வாரிய உதவி பொறியாளர், உதவி செயற் பொறியாளர், செயற்பொறியாளர், மேற்பார்வை பொறியாளர், மண்டல தலைமை பொறியாளர் ஆகியோருக்கும் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவ டிக்கை வேண்டி பதிவு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.