tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூன் 26- உடுமலை சங்கர் கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை முன்னணி, நாகை மாவட்டக்குழு சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தீஒமு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ப.சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தார்.  அமைப்பின் மாவட்டப் பொருளாளர் பி.ஏ.ஜி.சந்திரசேகரன், சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.டி.பகு, எம்.சுப்பிரமணியன், நாகை நகரச் செயலா ளர்(பொ) சு.மணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்(பொ) ப.கதிர்நிலவன், வாலிபர் சங்க நாகை ஒன்றியத் தலைவர் பி.எம்.நன்மா றன், சி.பி.எம். எஸ்.விஜயகுமார், என்.ரவி, டி.தினேஷ் பிரபு, ஜி.கோபி, ஆர்.அன்பழகன் பங்கேற்றனர்.