புதுக்கோட்டை, அக்.18- ஒப்பந்தத் தொழிலாளர்களை அடை யாளம் தெரிந்து அவர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் வியா ழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலை யம் அருகில் உள்ள மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கு.செல்வராஜ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் கு.நடராஜன், பொருளா ளர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் கலந்துகொண்டு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரை யாற்றினார். ஒப்பந்தத் தொழிலாளர்களை அடையா ளம் தெரிந்து அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலா ளர்களுக்கு திபாவளி பண்டிகைக்கான கருணைத் தொகை வழங்க வேண்டும். மின்சார அமைச்சர் அளித்துள்ள வாக்குறு திப்படி தினக்கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.380 சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.