தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, மே 20- மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி தருமபுரியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று தடுப்பு பணியில் மின்வாரிய ஊழி யர்கள், பொறியாளர்கள் அர்ப்பணிப்பு மிக்க பணியை செய்து வருகின்றனர். இந்நி லையில், மத்திய நிதியமைச்சர் அறிவித்த சுயசார்ப்பு திட்டத்தில் முதல் கட்டமாக யூனி யன் பிரதேசங்களில் உள்ள மின்வாரியம் தனியார்மயப் படுத்தப்படும் எனவும், தொடர்ந்து அனைத்து மாநிலத்தில் உள்ள அனைத்து மின் வாரியங்களும் தனியார் மயமாக்கப்படும் எனவும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இத்தகைய மோசமான சூழ்நிலையை பயன்படுத்தி மத்திய அரசு, மாநில மின் வாரியங்களை பிரிப்பதற்கான நடவடிக் கையை எடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை திரும் பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தரும புரியில் அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கூட்டு நடவடிக்கைக் குழு தலைவரும், சிஐடியு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவருமான பி.ஜீவா, பொறியாளர் சங்க தலைவர் சரவணன் மற்றும் அனைத்து சங் கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.