2 ஆண்டுகளாக ரூ. 4 லட்சம் வரை பாக்கி!
டோராடூன், நவ.9- மின் கட்டணத்தை முறையாக செலுத்த வில்லை என்று உத்தர்கண்ட் மாநில மின்சார வாரியம் மீதே அம்மாநில உயர் நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 25 மாதங்களில் 96 ஆயிரம் யூனிட் மின்சா ரத்தை உபயோகித்துள்ள மின்சார வாரியம் 4 லட்சம் ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும்- மாறாக, மாதத்துக்கு 425 ரூபாய் விகிதம் மட்டுமே செலுத்தி வந்தி ருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மின்சார வாரியம் மட்டுமின்றி அதன் பொதுமேலாளர் உட்பட அனைத்து ஊழி யர்களின் குடும்பங்களும், பணிஓய்வு பெற்ற பிறகும்கூட கட்டணத்தைச் செலுத்தாமல் ஏய்த்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் மற்றும் நீதிபதி அலோக் குமார் அடங்கிய அமர்வு அண்மையில் இந்த மனுவை விசா ரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, ஒரு அரசு நிறுவனமே மின்கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றலாமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு வாரத்திற்குள் விரி வான பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப் பித்துள்ளனர்.