tamilnadu

img

ராக்கம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.5- திருச்சி புறநகர் மாவட்டம் முசிறி ஒன்றியம் பேரூர் ஊராட்சியில் ராக்கம் பட்டி கிராம மக்களுக்கு குடிநீர், சாக்க டை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ராக்கம்பட்டி கிராமத்தில் ரேசன் கடை திறக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வார வேண்டும். மயான கொட்டகை அமைக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாழ னன்று முசிறி வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அ.பழநிசாமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் டீ.பி.நல்லுசாமி பி.கிருஷ்ணன், விதொச ஒன்றிய தலைவர் ஏ.சின்னவீரன், விதொச ஒன்றிய குழு உறுப்பினர் எம்.பால கிருஷ்ணன், வாலிபர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் எல்.நாகராஜ் ஆகியோர் பேசினர்.            ஆர்ப்பாட்டத்தை விளக்கி வாலிபர் சங்க எஸ்.மணிகண்டண், வி.புஷ்ப ராஜ், கே.குமார், செந்தில்குமார், பி.தன பால், ஆர்.பாலாஜி, எஸ்.செல்வக் குமார், ஆர்.விக்னேஸ்வரன், கே.தன் ராஜ், சந்திரகுமார், எஸ்.விஜயகுமார், வி.சத்தியராஜ், ஆர்.விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.