நாகர்கோவில், நவ.29- கன்னியாகுமரி மாவட்டம் இடைக் கோடு பேரூராட்சியில் கட்டிடம் கட்ட அனுமதி கோரி ஆறுமாதங்களா னாலும் அனுமதி கிடைக்காத அவலநிலை உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்தும் அடிப்படை வசதிகள் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடைக்கோடு பேரூராட்சி அலுவ லகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு எம்.பி சத்தியேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். செல்ல சுவாமி, மாவட்டக் குழு உறுப்பினர் பி.சிங்காரன், வட்டாரச் செயலாளர் ஆர்.ஜெயராஜ், ஏராளமான கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இடைக்கோடு பேரூராட்சியில் தொடர்ந்து செயல் அலுவலர் இல்லா மல் வளர்ச்சிப் பணிகள் நடைபெற வில்லை. தெருவிளக்கு பராமரிப்ப தற்கு மின் பொருட்கள் இல்லாத நிலை யில் இடைக்கோடு பேரூராட்சி மக்கள் இருட்டில் வாழும் நிலை ஏற்பட்டுள் ளது.
மேலும் தரிக்கடை- குடுக்கச்சி விளை, மலமாரி-குடுக்கச்சிவிளை கல்லுபாலம்- அப்பேற்றின்சாலை, கல்லுபாலம் - குறிஞ்சிகாலை. கல்லுப்பாலம் -இடுவறக்கல்விளை- புத்தன்சந்தை, புத்தன்சந்தை-மடத்து விளை, மேல்பாலை புல்லோட்டு கோணம்-கம்பறக்கல்விளை, முதப்பன்கோடு-பட்டாமவிளை பள்ளி யாம்விளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சாலைகள் பேரூராட்சி அதி காரிகளின் ஊழல் மற்றும் ஊதரித்த னத்தாலும் முடக்கப்பட்டு மக்கள் பயணிக்க முடியாத நிலையில் சாலைகள் சீர்குலைந்துள்ளன. தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் செயல்பட நிரந்தர செயல் அலுவ லரை நியமிக்க வேண்டும், ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மோசமான சாலை களை செப்பனிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.