tamilnadu

img

பாஜகவால் நாட்டின் ஜனநாயகம் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகிறது....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் திருச்சி வெண்மணி இல்லத்தில் சனிக்கிழமை அன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள்காத்திருக்கின்றனர். அதிமுக – பாஜககூட்டணி படுதோல்வி அடையும். பொதுவாக நாட்டின் எல்லையை பாதுகாத்துஅண்டை நாட்டினர் உள்ளே வராமல்தடுத்து நிறுத்துவர். ஒருநாட்டின் பாதுகாப்பு என்பது எல்லையை பாதுகாப்பதாக இருக்கும். ஆனால் மத்திய அரசு தில்லி எல்லையை பாதுகாத்துவிவசாயிகளை உள்ளே விடாமல் தடுத்துநிறுத்தும் நிலையில் உள்ளது.

வெட்கக்கேடு
போராடும் விவசாயிகள் எதிர்க்கும் வேளாண் சட்டங்களுக்கு தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் வேளாண்சட்டங்களை அதிமுக அரசு ஆதரிக்கின்றது. இது வெட்கக்கேடானது. வேளாண் சட்டங்களை கொண்டு வருவதற்கு முன் தங்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என விவசாயிகள் கேட்பது தவறா? இது ஒரு அடிப்படைஉரிமை. விவசாயிகள் போராட் டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கின்றோம்.

இந்த பட்ஜெட்டில் மகாத்மாகாந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்திற்கான நிதியை 34.5 சதவீதம் குறைத்துள்ளனர். இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.88 லட்சம் வேலை காலியாக உள்ளது. அதனை நிரப்ப அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தபால்துறை தேர்வில் ஆங்கிலம், இந்தியில் தேர்வுத்தாள் கொடுக்கப்படுகிறது. போராடித் தான் தமிழில் தேர்வுத்தாள் வாங்கும்நிலை உள்ளது. தமிழக அரசு மத்தியஅரசுக்கு அடிமையாக உள்ளது. பாஜகவால் ஜனநாயகம் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது. பாஜக இந்தியாவை ஒருமுகத்தன்மை கொண்ட நாடாகவும், ஒருமொழி, ஒருதலைவர் கொண்ட நாடாகவும் மாற்ற முயற் சிக்கிறது.

பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஆக உள்ளது. கச்சா எண்ணெய் விலை 17 சதவீதம் உயர்ந்துள்ளது என்கின்றனர். ஆனால் 70 சதவீதம் வரி விதிக்கின்றனர். இதன் மூலம் மத்திய அரசு மக்களிடம் பிட்பாக்கெட் அடிக்கின்றது. சமீப காலங்களாக மதச்சார்பின்மை என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து நாங்கள்ஒரு மதசார்பற்ற அரசை அமைப் போம் என்றார். பேட்டியின் து சிபிஎம் மத்திய
கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.