திருச்சிராப்பள்ளி: நாட்டின் பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாத மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைக ளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்க தெருமுனை கூட்டம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஞாயிறன்று துவகுடிமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜ், மல்லிகா, ஒன்றிய செயலாளர் நடராஜன், பெல் சிஐடியு சங்க மாவட்ட துணை தலைவர் அருணன், பொதுச்செய லாளர் பிரபு, சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் தங்கவேல், மாரியம்மாள் ஆகியோர் பேசினர். கார்மேகம், அமீர், செபாஸ்டின், சாத்தையா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். துவாக்குடி கிளை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.