tamilnadu

img

பாடகர் கருப்புசாமிக்கு சிபிஎம் சார்பில் நிவாரணம்

கரூர், மே 8- கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் மூத்த தோழர் பாடகர் கருப்புசாமி (80). 1982-1995 வரையிலான காலக் கட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களை கட்சி மேடைகளிலும், தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் பாடி அனைவராலும் பாராட்டு பெற்றவர்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் டிஎன்பிஎல் காகித ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற  கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளர் கே.சண்முகம், தனது சொந்த நிதியிலிருந்து கொரோனா நிவாரண உணவுப் பொருட்களை கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமியிடம் வழங்கினார்.  அந்த உணவு பொருட்களை, பாடகர் கருப்புசாமியின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி வழங்கினார்.