tamilnadu

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சிபிஎம் சார்பில் நிவாரணம்

திருச்சிராப்பள்ளி, மே 25- சிபிஎம் திருச்சி அடுத்த மணப்பாறையில் கட்சியின் வட்டக்குழு சார்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வட்டச் செயலாளர் ராஜகோபால் தலைமையில் நிவாரண பொருட்கள் 50 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த தொழிலாளர்களை சொந்த மாநி லத்திற்கு அனுப்புவதற்கு வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன் சுரேஷ் கண்ணன் மற்றும் உசேன் மணிகண்டன் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.