tamilnadu

img

திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை

சீர்காழி: நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற  பொங்கல் விழாவையொட்டி கொள்ளிடம் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, திருவள்ளுவர் ஆகியோர் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  ஒன்றிய தி.க செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நிர்வாகிகள்  சந்தானகிருஷ்ணன், பன்னீர்செல்வம்,  காமராஜ், விவசாய சங்க துணை செயலாளர் பாக்ய ராஜ், சுந்தரலிங்கம், ராஜாராமன், பாண்டியன், ரவி, பிச்சை, புகாரி உள்பட பலர் கலந்து கொண்ட னர். இதே போல் புத்தூர், தைக்கால், மாதிரவேளூர், பெரம்பூர் ஆகிய இடங்களிலும் விழா நடைபெற்றது.