tamilnadu

img

கட்டுமானத் தொழிலாளர் கையெழுத்து இயக்கம்

திருச்சிராப்பள்ளி, அக்.22- கட்டட கட்டுமான தொழிலாளர் சட்டம் 1996 மற்றும் 36 மாநில கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தை சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலி யுறுத்தி இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் நாடாளுமன்ற சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட உள்ளது. அதனொரு பகுதியாக இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க திருச்சி மாநகர் அபிஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் செவ்வாய் அன்று ராஜீவ் காந்தி நகர் பகுதியில் கட்டுமான தொழிலாளர்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு பகுதி செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் எம்.எஸ்.சேது, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.