1ம் பக்கத் தொடர்ச்சி...
கட்டுமான மூலப்பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானதொழில் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த சூழலில் இங்கே கட்டுமானத் தொழில்நுட்பம், தொழில் சார்ந்தஉரிமைகளைக் கேட்பது, தொழிற்சங்கங்களை வளர்த்தெடுப்பது என்ற அடிப்படையில் கட்டுமான தொழிலின்நுட்பமும் வரலாற்றுப் பாரம்பரிய மும்மிக்க நகரமான மதுரையில் தமிழகத்தின் தமிழ் மாநில 9 - ஆவது மாநில மாநாடு ஒரு வரலாற்று திருப்பமாக அமைய இருக்கிறது என்ற நம்பிக்கையோடு இங்கே தோழர்கள் வந்திருக்கிறீர்கள். மதுரை ஒரு பாரம்பரியமான நகரம். வெறும் பாரம்பரியமான நகரம் மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது இன்றைக்கு தமிழ் மொழியை மத்திய அரசு புறக்கணித்துவிட்டு சமஸ்கிருதத்தை முன்னிறுத்துகிறது. தமிழகத்தில் உள்ள அகழாய்வுகளில் இன்றைக்கும் சான்றாக உள்ளதுகட்டிடக்கலை மட்டும்தான் அந்த கட்டிடக்கலை தான் தமிழகத்தின் வரலாற்றை இன்றைக்கு உலகுக்கு எடுத்துச் சொல்லி உள்ளது. ஆனால் நம்முடைய பாரம்பரியத் தனித்துவமான பாரம்பரியம் என்பதை நாம் யோசிக்கின்ற போது தான் மிகமுக்கியமாக நிகழ்வை பிரதமர் மோடி செய்து கொண்டிருக்கிறார். திருக்குறளையும் தமிழ்மொழியையும் பேசிக்கொண்டே சமஸ்கிருதம் தேவ மொழி என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
ஆனால், நாம் எல்லா நாகரிகத்திற்கும் முதன்மையானது தனித்துவமானது எங்களுடைய தமிழ் மொழி என்று உரத்துச் சொல்ல வேண்டும். அதற்கு சான்று இங்குள்ள அகழாய்வுகளில் கிடைக்கும் கட்டிடக் கலை பொருட்களும் அதிலிருந்து எடுக்கப்படும் கல்வெட்டுகளும் தான். தமிழகத்தில் உள்ள அகழாய்வுகளில் எடுக்கப்படும் செங்கல்களின் அளவு ஒரே அளவில் உள்ளது. அப்படி என்றால் அன்றைக்கு கட்டுமான தொழில் எவ்வளவு சிறப்பாகசெயல்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும். அதேபோல் ஒரு செங்கலை அகழாய்வில் எடுத்துள்ளார்கள். அதில் ஒரு நாயின் கால் தடம் பதிந்துள்ளது.அதை தற்போது ஆய்வுக்கு அனுப்பி யுள்ளார்கள். அது நாயினுடைய கால்தடமா அல்லது வேறு ஏதும் காரணமா என்று ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒரு செங்கலை வைத்து அந்தக் காலத்தில்எந்த விலங்கினை உடையவன் என்பதைஆய்வு செய்வதற்கு உதவுகிறது என்றால் கட்டுமான தொழில்நுட்பம் எவ்வாறு இருந்துள்ளது என்பதற்கு வேறு சான்று இங்கு இல்லை. எனவே வரலாற்றுச் சான்றாக இருக்கும் கட்டுமானத் தொழிலை பாதுகாத்திட நடைபெறும் இந்த மாநாட்டில் வரவேற்று வாழ்த்தி நன்றி கூறுகிறேன் என்று பேசினார்.