tamilnadu

img

பள்ளியை இடமாற்றம் செய்வதை கண்டித்து பெற்றோர், மாணவர்கள் சாலை மறியல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 17- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூ ரில் மாநகராட்சி அய்யனார் உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 5 வருடத்திற்கு முன்புதான் நடு நிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.  இந்த உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டிடம் மேலூர் பகுதியில் கட்டப் படாமல் இங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு பகுதியில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதனையடுத்து மேலூரில் உள்ள பொதுமக்கள் உயர்நிலைப்பள்ளிக் குரிய கட்டிடம் 4 கிலோ மீட்டர் தொலை வில் இருப்பது, குழந்தைகள் அங்கு சென்றுவர போதுமான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை. அதனால் எங்களின் பிள்ளை களை அங்கு அனுப்பமாட்டோம் என பலகட்ட போராட்டம் மற்றும் பேச்சு வார்தைகளை கடந்த 2 வருடங்களாக நடத்தி வருகின்றனர். இதையடுத்து திருச்சி ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில், செவ்வா யன்று மேலூர் அய்யனார் பள்ளியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலு வலர் (ஒருங்கிணைந்த கல்வி) முத்துச் செல்வன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பொது மக்கள் மேலூரிலேயே பள்ளி கட்டிடம் கட்டப்பட வேண்டும். அதுவரை எங்கள் குழந்தைகளை மூலத்தோப்பு பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என உறுதியாக தெரிவித்தனர். இந்த கருத்துகளை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து இந்த பள்ளி யை மூலத்தோப்பு பகுதிக்கு மாற்றக் கூடாது என்ற கோரிக்கையை வலி யுறுத்தி புதனன்று காலை பெற்றோர் கள், மாணவர்கள் பள்ளியின் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் காவல்நிலைய உதவி ஆணை யர் ராமச்சந்திரன், தாசில்தார் கனக மாணிக்கம் இன்ஸ்பெக்டர் ராஜேந்தி ரன், எஸ்எஸ்ஐ சீனிவாசன், மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் பெற்றோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, உங்களது கோரிக்கை களை எழுத்து மூலம் கொடுங்கள். அதன்பேரில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவெடுக்கப்படும் என அதி காரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து வியாழனன்று முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர்கள் உறுதியளித்தனர். மேலும் வியாழ னன்று ஸ்ரீரங்கம் தாசில்தார் அலு வலகத்தில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதாக வும் தெரிவித்து கலைந்து சென்றனர்.