tamilnadu

img

போர்க்கால அடிப்படையில் குடிமராமத்து பணிகளை துவங்கி முடிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திருவாரூர், மே 15- தமிழக அரசு குடிமராமத்து பணிக்காக ரூ.500 கோடி ஒதுக்கி அறிவித்துள்ளது. மேலும் அதே நேரத்தில் மேட்டூர் அணையிலும் 100 அடிக்கு மேலாக தண்ணீர் இருப்பு உள்ளது.  தென் மேற்கு பருவமழையும் காலத்தே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகைய பொருத்தமான சூழலில் அரசும் மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டியவை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டுள்ளது.  இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்ரமணியன், மாவட்டச் செய லாளர் வி.எஸ்.கலியபெருமாள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடமும்  மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, 

தமிழகம் முழுமைக்கும் தூர்வாரும் பணிக்கு ரூ 500 கோடி ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது.  திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 140 கோடி எனவும் தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.65 கோடி எனவும் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.  இவ்வாண்டு மேட்டூர் அணை யில் நீர் மட்டம் 100 அடிக்கு மேல் இருப்பதாலும் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 12ஆம் தேதிக்கு முன்பாகவே தொ டங்க இருப்பதாக வானிலை ஆரா ய்ச்சி மையம் தெரிவித்திருப்பதாலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான சாத்தி யக்கூறுகளை ஆராய வேண்டும்.  எனவே போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணி யினை துவங்கி முடிக்க வேண்டும். இந்த பணிகளை பதிவு பெற்ற  பாசனதாரர்கள் சங்கங்கள் மூலம் வெளிப்படைத் தன்மையோடு செய்திட டெல்டா மாவட்ட சம்பந் தப்பட்ட அதிகாரிகள் உரிய காலத்தில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.  மேலும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் தொகையினை வெளிப்ப டைத் தன்மையுடன் தெரிவிக்க வேண்டும் என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.