தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்த வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. விரைவில் இது 30ஆயிரத்தைக் கடந்து விடும். இந்த எண்ணிக்கையில் 90 விழுக்காட்டினர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் நோய்த்தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரு கிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதித்துவந்தாலும் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மக்களிடம் பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டுள்ளது.
இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்த பின்னர் நோயா ளிகளைத் தனிமைப்படுத்த புதிய இடத்தை தேடு கிறார்கள். சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவமனை என கோவிட் 19 தொற்றுக் கான அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளி கள் நிரம்பி வழிகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் அடுத்த மாத இறுதிக்குள் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்றும் 1,600 பேர் பலியாவார்கள் எனவும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. மாநகரில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நோய்த் தொற்று உச்சத்தில் இருக்கும் என்றும் இந்த நிலை அக்டோபர் மாதம் வரை தொடரும் என்று கூறி யிருப்பது கவலையளிக்கிறது.
நோய் தொடர்ந்து பரவி வருவதால் போதுமான அளவு படுக்கைகள், தனிமைப்படுத்தும் வசதி, தீவிர சிகிச்சைப்பிரிவு போன்ற முக்கியமான உள்கட்ட மைப்பு வசதிகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சென்னையில் குடிசைப் பகுதிகளிலும் தேனாம் பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களிலும்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக மாநகராட்சி கூறினா லும் நகரம் முழுவதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உணர்த்துகிறது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மிக மிக அதிகமானது. அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத வர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடும்போது முதலமைச்சர் இலவச காப்பீடு அட்டை இருந்தா லும் அது ஓரளவுக்குத்தான் உதவும். தனியார் மருத்துவமனைகள் கட்டணத்தை வசூலிப்பதில் குறியாக இருக்கும். எனவே இதில் உள்ள நடை முறை பிரச்சனைகளைக் களைந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தரமான போதுமான சிகிச்சை இல வசமாகக் கிடைப்பதை மாநில அரசு உறுதிப் படுத்தவேண்டும்.
மாநகராட்சியும் நோய் பரவலைத் தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு நோய்த்தொற்று அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்பும் தடுப்பு நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதில் அரசு அலட்சியமாக மக்களின் உயிருக்குக் கடுமையான விலை கொடுக்கவேண்டியி ருக்கும். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படவேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.