தஞ்சாவூர் ஜூலை.6- திருநெல்வேலியில்அநீதிகளைத் தட்டிக் கேட்டதால் ஆதிக்க சாதியினரால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி தோழர் அசோக் படுகொலை செய்யப்பட்டார். இதையொட்டி பூதலூர் தெற்கு ஒன்றியம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம், திருக்காட்டுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, வாலிபர் சங்கம் பூதலூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் டி.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.வி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச்செயலாளர் சி.பாஸ்கர், தமிழரசன், ரமேஷ், சந்திரபோஸ், தங்கமணி, துரைராஜ், காமராஜ், கர்ணன், விஸ்வநாதன், முனியய்யா ஆகியோர் கலந்து கொண்டு தோழர் அசோக் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.