கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த கடலூர் தியாகிகள் குமார், ஆனந்த் நினைவு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுவை உழவர்கரை நகரக் குழு சார்பில் சாமிப் பிள்ளை தோட்டம் பகுதியில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பிரதேச தலைவர் ஆனந்த், பொருளாளர் பாஸ்கர், மாதர் சங்க பிரதேச செயலாளர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக போதைக்கு எதிராக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.