எழும்பூர் தொகுதி 104வது வட்டம் சாலை மாநகரில் கழிவுநீர் அடைப்பை சரிசெய்யவும், குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கவும் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கிளைத் தலைவர் கௌதம், செயலாளர் மருது ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை பகுதிச் செயலாளர் பார்த்திபன் தொடங்கி வைத்தார்.