tamilnadu

img

சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வணிகம் ரூ.71,513 கோடி உயர்வு

மன்னார்குடி மே 19- சிட்டி யூனியன் வங்கியின் மொத்தவணிகம் கடந்த நிதியாண்டில் 17 சதவீதம் உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 513 கோடியாக அதிகரித்துள்ளதாக நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான காமகோடி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் 2018-19 ஆம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு மற்றும் வருடாந்திர கணக்கு முடிவுகளை வெளியிட்டு காமகோடி கூறியதாவது: வங்கியின் மொத்த வணிகம் கடந்த நிதியாண்டில் 17 சதவீதம் உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 513 கோடியாக அதிகரித் துள்ளது. வங்கியின் வைப்பு தொகை (டெபாசிட்) மற்றும் கடன்கள்(அட்வான்ஸ்) கடந்த ஆண்டை விட 17 சதவீதம் உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 448 கோடியாகவும், ரூ.33 ஆயிரத்து 65 கோடியாகவும் உள்ளது. நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.683 கோடியாக அதிகரித்துள்ளது.நிகர வட்டி வருமானம் நான்காவது காலாண்டில் 14 சதவீதம் உயர்ந்து ரூ.421 கோடியாக உள்ளது. மொத்த லாபம்நான்காவது காலாண்டில் 15 சதவீதம் அதிகரித்து ரூ 338 கோடியாக உள்ளது. நிகர லாபம் நான்காவது காலாண்டில்15 சதவீதம் அதிகரித்து ரூ.175 கோடியாக உள்ளது. வங்கி கடந்த நிதியாண்டில் 50 கிளைகளையும், 64 ஏ.டி.எம்களையும் புதிதாக நிறுவியுள்ளது. மொத்தம் 650 கிளைகள், ஆயிரத்து 685 ஏடிஎம்களுடன் இயங்கி வருகிறது. இவ்வாறு காமகோடி கூறினார். உடன் வங்கியின் பொதுமேலாளர் ரமேஷ் இருந்தார்.