திருச்சிராப்பள்ளி, மார்ச் 8- சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் பெல் சிஐடியு சங்க அலுவலகத்தில் சிஐடியு அகில இந்திய 16-வது மாநாட்டு தீர்மானங்கள் விளக்க பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்ட தலை வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநாட்டு தீர்மானங்களை விளக்கி சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் குமார் பேசினார். சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன், பெல் சிஐடியு சங்க பொதுச்செயலாளர் பிரபு, துணைத்தலைவர் அருணன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, பூமாலை, பழ னிவேல், ராஜா, ரமணி, தியாகராஜன் உள்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.