tamilnadu

img

அறம் மக்கள் நலச்சங்க விழா

திருச்சி: அறம் மக்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப் பிரிவில் மாநில துணைத் தலைவருமான ரமேஷ் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள எமரால்டு பேலஸில் பிறந்தநாள் விழா அறம் மக்கள் நல சங்க நிறுவனர் ராஜா தலைமையில் நடைபெற்றது.  இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன், அறம் மக்கள் நல சங்கத்தின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர் சற்குணம், ஜனனி பாலு, திரைப்பட நடிகர்கள் விமல், நடிகை ஹனிகா, ஈரோடு மகேஷ், அமுதவாணன், மதுரைமுத்து, நடிகர் கவிஞர் பா. விஜய் ஆகியோர் கலந்து கொண்டு ரமேஷ் குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  மேலும் இந்நிகழ்ச்சியில் திரைப்பட கலைநிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மதியம் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து அறம் மக்கள் நல சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.