திருச்சிராப்பள்ளி, ஏப்.5-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தனாம்பட்டி ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் வியாழனன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.பிரச்சாரத்திற்குக் கிளைச் செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், ஏ.பழநிசாமி, ஒன்றிய செயலாளர் எம்.ஆனந்தன், தி.முக. செயலாளர் ஆசிரியர் வைத்தியலிங்கம், மதிமுக மாவட்ட பிரதிநிதி அருணாராஜன், சிபிஐஎம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பொன்னுசாமி, நடராஜன், ரவி, பாக்யராஜ் ஆகியோர் பேசினர். பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.