நாகப்பட்டினம், ஏப்27-பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களு க்குக் கடந்த 4 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை. உடனடியாக ஊதியம் வழங்கிடக் கோரி சனிக்கிழமை மாலை நாகை பி.எஸ்.என்.எல். அலுவலக வளாக த்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க நாகை கிளைச் செயலாளர் பி.சண்முகம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பி.பிரகாஷ், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் மணிவண்ணன், நா.ராஜாராமன் மாவட்ட இணைப் பொருளாளர் ரகுமான், முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.குருசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.