tamilnadu

img

ரேஷன் கடை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.இதையொட்டி தமிழக அரசின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது

. ஏற்கெனவே அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியம் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.