tamilnadu

img

பணம் கேட்டு பெண்களை தரக்குறைவாக பேசும் நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! மாதர் சங்கம் வட்டாட்சியரிடம் மனு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 2- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க  மணப்பாறை வட்டச் செயலாளர் சரஸ்வதி  தலைமையில் மணப்பாறை வட்டாட்சியரிடம் பெண்கள் கொடுத்த மனுவில், திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் நுண்பி ரிவு நிதி (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவ னங்களிடம் இருந்து கடன் பெற்று வாரம் தோறும் அல்லது மாதம் தோறும் செலுத்தி வந்தனர்.  இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவ டிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் மாதம் வரை கடன் தொகையை கேட்டு தொந்தரவு செய்ய க்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  இதையும் மீறி நிதி நிறுவன ஊழி யர்கள் கடன் பெற்றவர்களின் வீட்டிற்கு சென்று கடன் தொகை கேட்டு தொந்தரவு செய்வதுடன், தகாத வார்த்தைகளால் திட்டும் சூழல் உள்ளது. எனவே பெண்களை இழி வாக பேசும் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகஸ்ட்  மாதம் வரை கடன் தொகை வசூலிப்பதிலி ருந்து விதி விலக்கு அளித்திட வேண்டும் என  கூறியிருந்தனர். வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போது  ராஜாமணி, நஸ்ரின் பானு, சிபிஎம் வட்டச்  செயலாளர் ராஜகோபால், வட்டக் குழு  உறுப்பினர் சுரேஷ், சீனிவாசன், வடக்கிப்பட்டி  கிளை அழகர்  பாரதியார் நகர் மணிகண்டன், உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.