districts

img

விடுதிகளில் தங்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குக: மாதர் சங்கம்

திருவண்ணாமலை, ஆக. 20- திருவண்ணாமலை மாவட்ட விடுதி களில் தங்கி படித்து வரும் மாணவி களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாதர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 9 வது மாநாடு வேங்கிக்கால் அடுத்த முத்தம்மாள் நகரில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் எம். தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் கே. வாசுகி கொடியேற்றி வைத்தார். என்.ஷகிலா வரவேற்றார்.  நகர தலைவர் எஸ். செல்வி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்,  மாவட்டச் செயலாளர் லூர்து மேரி வேலை அறிக்கையும், மாவட்டப் பொரு ளாளர் லட்சுமி வரவு-செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனர்.  மாநிலச் செயலாளர் எஸ். ராணி, மாநில துணைத் தலைவர் எஸ்.டி. சங்கரி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். பாக்கியலட்சுமி ஆகியோர் உரையாற்றினர். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். பிரகலநாதன் வாழ்த்துரை வழங்கினார். விடுதி மற்றும் காப்பகத்தில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும்,  பெண்களுக்கான வேலை வாய்ப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும், சமையல் எரிவாயு கேஸ், பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும், ரேசன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் மாவட்டத் தலைவராக இ.லட்சுமி, மாவட்டச் செயலாளராக எம். அஞ்சலி, மாவட்டப் பொருளாளர் எஸ்.செல்வி ஆகி யோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர்.