மன்னார்குடி, மே 29- கோட்டூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு பெருந் தலைவர் என்.மணி மேகலை தலைமையிலும், ஆணையர்கள் பக்கிரிசாமி, கலைச்செல்வன் முன்னிலை யிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கோவிட் -19 ன் சுகாதா ரப் பணிகளில் 2 மாதங்கள் ஒன்றியக்குழு தலைவர், ஆணையர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தொ டர்ந்து மக்களுக்கு சேவைப் பணியாற்றி யமைக்காக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மேலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மாநில அரசு ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி அரசின் 15 வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஒதுக்கியிருப்பதாக கூறப்பட்டது. மேலும் தமிழக அரசு கோட்டூர் ஊராட்சி ஒன்றியக்குழுவிற்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிதியில் சாலை பராமரிப்புப் பணிகளுக்கு 50 சதம், குடிநீர் வசதிக்கு 25 சதம், குடிநீர் தொட்டி பராமரிப்பு பணிகளுக்கு 25 சதம் என ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக ஒன்றியக்குழு பெருந்தலைவர் என்.மணிமேகலை கூட்டத்தில் அறிவித்தார்.