திருச்சிராப்பள்ளி, ஆக,26- கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் மணல் மாட்டு வண்டி குவாரி திறக்க வேண்டும். திடீர், திடீரென மணல் மாட்டு வண்டி குவாரிகளை மூடுவதை கைவிட்டு தொழிலாளர்களையும், மாடுகளையும் பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மண்ணச்சநல்லூர் ஒன்றியக்குழு சார்பில் திங்களன்று நம்பர்-1 டோல்கேட் ரவுண்டானா அருகில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாநகர் மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர், புறநகர் மாவட்ட செயலளார் சிவராஜ், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், வி.தொ.ச. புறநகர் மாவட்ட தலைவர் சுப்பு, சிபிஎம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன், மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் குணா, பாலாஜி, ரமேஷ், ஜான், ரவி, ஜெயகாந்த், ராஜேந்திரன், திருவேங்கடம் உள்பட 100-க்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.