சேலம், மார்ச் 5- அரசு போக்குவரத்து தொழிலாளர்க ளின் ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வலியுறுத்தி வியாழனன்று அஸ்தம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நிலுவைத் தொகை உள்ளிட்ட பண பலன்களை வழங்க வேண்டும். 3 ஆயிரத் திற்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று சிஐடியு மற்றும் எல்பிஎப் தொழிற்சங்கங்கத்தினர் அஸ்தம் பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 10 ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் பணிமனை தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். சிஐடியு சாலைப் போக்குவரத்து சம்மேளன துணைத் தலை வர் எஸ்.கே.தியாகராஜன் சிறப்புரையாற்றி னார். சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் என்.முருகேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பணி மனை செயலாளர் ஆர்.சந்திரன், ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்ட திரளான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.