திருச்சிராப்பள்ளி, ஏப்.2- தமிழகத்தில் வருகிற 18-ந் தேதிநாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி காவல்துறை மூலம் கட்சி பிரமுகர்களிடமும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலோ, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்வகையிலோ நடந்து கொள்ள மாட்டேன் என ஒப்பந்தப் பத்திரத்தில் எழுத்துப் பூர்வமாக கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. ஒப்பந்தத்தை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கவோ அல்லது வழக்கு தொடரவோ சட்டத்தில் இடம் உள்ளது.இந்நிலையில் பிறகட்சிகளின் நிர்வாகிகளைக் கையெழுத்துப் போட அழைக்கப்பட்டதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் வேலுச்சாமியைக் கையெழுத்துப் போட அழைத்ததும் தெரியவந்தது. மேலும் தேர்தல் நடைபெற இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் இந்த ஒப்பந்தப் பத்திரம் 6 மாதங்கள்வரை அமலில் இருக்கும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது 6 மாதம் வரை வழக்கு தொடர முடியும். காவல்நிலையம் முற்றுகைஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல் வன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயகவாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திங்களன்று இரவு எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் மணிகண் டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்,இந்த பெயர் பட்டியலை எடமலைப் பட்டிபுதூர் காவல் நிலையத்தினர் தயாரிக்கவில்லை. தேர்தல் ஆணையம் கொடுத்த பெயர் பட்டியலை மாநகர காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் நாங்கள் கையெழுத்து பெறுகிறோம் என்றார். இதில் உடன்பாடு இல்லையென்றால் மாநகர காவல் ஆணையர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம் என்றார்.இதற்கு பதிலளித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் பேசுகையில், தேர்தல் நேரங்களில் பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வார்கள். ஆனால் பொதுமக்களின் உரிமைகளுக்காக போராடும் எங்களை முடக்கும் வகையில் பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்வதுநியாயமற்றது. எனவே இதுகுறித்து நாங்கள் மேல் முறையீடு செய்ய உள்ளோம் என்றார். பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் எடமலைப்பட்டிபுதூர் பகுதிச் செயலாளர் வேலுச்சாமி,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாநகர் மாவட்டத் தலைவர் சந்திரபிரகாஷ், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, இந்திய மாணவர் சங்க மாநகர்மாவட்டத் தலைவர் சேதுபதி ஆகியோர்கலந்து கொண்டனர்.