tamilnadu

தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

திருவாரூர்- காரைக்குடி ரயில் சேவையை துவக்க கோரிக்கை

தஞ்சாவூர், மே 9-திருவாரூர்- காரைக்குடி இடையே ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என திராவிடர் கழகம் அறிவுறுத்தியுள்ளது. பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் பொதுக்குழு உறுப்பினர் அருள் நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் வைசிதம்பரம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் திருவாரூர் காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை திட்டம் முடிவடைந்துள்ள நிலையில் உடனே இவ்வழித்தடத்தில் ரயில்களை இயக்க வேண்டும். அறந்தாங்கியில் உள்ள தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் இரா நீலகண்டன் மாவட்ட இளைஞரணி தலைவர் சோ.மணிகண்டன் பேராவூரணி ஒன்றிய செயலாளர் ஸ்ரீசந்திரமோகன் இளைஞரணி பின்னவாசல் சுபசிஅப்பரமன் காடு குணசேகரன் சித்தர்காடு பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


வாலிபர் தற்கொலை ,ஆண்,

திருச்சிராப்பள்ளி, மே 9- திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் பூசாரி தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜசேகர்(27), கூலித் தொழிலாளி. இவர் சரி வர வேலைக்கு செல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதனன்று ராஜசேகர் வீட்டில் விஷம் சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துவாக்குடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பெண்களுக்கு தையல் பயிற்சி

திருச்சிராப்பள்ளி, மே 9-தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் சார்பில்மே 10-ம் தேதி முதல் ஒரு மாதம் தையல் பயிற்சி தொடங்க உள்ளது. இப்பயிற்சிக்கு கல்வி தகுதி, வயது வரம்பு இல்லை.ஏற்கனவே தையல் அனுபவம் இருந்தும் சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. இப்பயிற்சியில் ஆண்கள், பெண்கள், மாற்றுபாலினத்தவர் என அனைவரும் கலந்து கொள்ளலாம். பிற்பகல் 2 மதல் மாலை 4 மணி வரை, மாலை 4 மதல் 6 மணி வரை 2 குழுவாக பயிற்சி நடைபெற உள்ளது. மேலும் எம்பிராய்டரி, கைவினைப் பொருட்கள், வளையல், குந்தன் நகைகள், சானிடரி நாப்கின் உற்பத்தி, சிறுதான்ய உணவு உற்பத்தி மற்றும் கேட்டரிங் போன்ர குறுகிய கால பயிற்சிகளும் வழங்கப்படும் என அதன் நிர்வாக அலுவலர் மல்லிகா தெரிவித்துள்ளார்.