அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் 6-ஆவது சங்க அமைப்பு தினம் மன்னார்குடியில் கடைப்பிடிக்கப்பட்டது. சங்க பொருளாளர் எஸ்.பாலு தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தி.சீனிவாசன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கே.அகோரம், சங்க மூத்த தலைவர் நந்தகுமார், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.