tamilnadu

img

ஐபிஎல் தொடர்... புதிய டைட்டில் ஸ்பான்சராக "ட்ரிம் 11" நிறுவனம் ஒப்பந்தம்...

மும்பை 
2020-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக சீன மொபைல் நிறுவனமான "விவோ" ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் இந்தியா  - சீனா எல்லை பிரச்சனை காரணமாக அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது. 

இந்நிலையில் புதிய ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக "ட்ரீம் 11" என்ற விளையாட்டு இணையதள நிறுவனம் ரூ.222 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் அரை ஆண்டுகால ஒப்பந்தம் தான். அதாவது 2020 டிசம்பர் 31 வரை மட்டுமே செல்லும். அதனால் தான் ஒப்பந்த தொகை வெறும் ரூ 222 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. விவோ ஆண்டு ஒப்பந்தமாக ரூ 440 கோடி செலுத்திருந்தது. இந்த ஏலத்தில் பிரபல நிறுவங்களான டாடா (ரூ.180 கோடி), பைஜூஸ்  (ரூ.125 கோடி) நிறுவனங்கள் போட்டியில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  

புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள "ட்ரீம் 11"  நிறுவனம் ஏற்கெனவே ஐபிஎல் தொடரின் விளம்பரதாரராக உள்ளது. இந்த நிறுவனத்தின் விளம்பர தூதரக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சமீபத்தில் ஓய்வு பெற்ற மூத்த வீரருமான தோனி உள்ளார்