குடவாசல், பிப்.19- இந்திய கப்பற்படை புரட்சி தினத்தில் ‘எங்கே எனது வேலை’ உள்ளிட்ட ஐந்து கோ ரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நீடாமங்க லம் ஒன்றியத் தலைவர் டி.பி.கிஷோர்குமார் தலைமை வகித்தார். வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் ஜெ. ஜெயராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.முகமதுசலாவுதின், மாவட்டச் செயலாளர் கே.பி. ஜோதிபாசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் எஸ்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.விஜய், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் டி.ஜான் கென்னடி, குடவாசல் ஒன்றி யச் செயலாளர் கே.பகத்சிங் உட்பட நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.