tamilnadu

வேலம்மாள் பள்ளி மாணவர்கள் தேசிய திறனறித் தேர்வில் சாதனை

மன்னார்குடி, ஏப்.13-தேசிய அளவிலான திறனறித் தேர்வில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் அங்கீகாரமும் அளிக்கப்படும். இந்நிலையில் வேலம்மாள் பள்ளி, மாணவர்களை இப்போட்டித் தேர்வுக்கு முழு முயற்சியுடன் ஆயத்தப்படுத்தி வந்தது. இந்த கல்வியாண்டில் நடந்த திறனறித் தேர்வில் வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த 117 மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். இதில் மாநில அளவில் முதல் 5 இடங்களைபெற்ற மாணவர்களில் 3 பேரும், முதல் 20 மாணவர்களில்9 பேரும் ஆவர். கீர்த்தி ஸ்ரீ என்ற மாணவி இத்தேர்வில்மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார் என வேலம்மாள் கல்விக்குழும இயக்குநர் எம்.வி.எம்.சசிக்குமார் தெரிவித்தார்.